சிற்பம்

கூர்மவதாரம்

கூர்மவதாரம்
சிற்பத்தின் பெயர் கூர்மவதாரம்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
பாற்கடல் கடையும் பொழுது ஆமை வடிவெடுத்த விஷ்ணு மந்தர மலையைத் தாங்குதல்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரம். அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகின்றனர். மந்தர மலை மத்தாகவும், வாசுகி பாம்பு நாணாகவும் கொண்டு பாற்கடல் கடையப்படுகிறது. அப்போது மந்தரமலை கடைதலின் வேகத்தினால் நகரத் தொடங்குகிறது. விஷ்ணு கூர்ம அவதாரமெடுத்து மலையின் அடியில் சென்று அதனைத் தாங்குகிறார். இச்சிற்பத்தில் விஷ்ணு அரையாடையுடன் காட்டப்பட்டுள்ளது சிறப்பு. பெரும்பாலும் திருமாலின் சிற்ப வடிவங்களில் அவருக்கு கணுக்கால் வரையிலான பட்டாடையே காட்டப்பட்டிருக்கும். இடது காலை சற்று மேலே தூக்கி வைத்து வலது காலை ஊன்றி ஊர்த்துவ ஜானுவில் நிற்கிறார். வலது கையை இடையில் வைத்தவாறும், இடது கையை மேலே உயர்த்தி மலையைத் தாங்கிப் பிடித்தவாறும் உள்ளார். நீண்ட கிரீட மகுடமணிந்து, நீள்காதுகளில் மகரக்குழை பூண்டுள்ளார். மார்பில் முப்புரிநூல் செல்கிறது. கைகளில் தோள்வளை, முன்வளை, கால்களில் வீரக்கழல்கள் அமைந்துள்ளன. கிரிதர கோபாலரின் அருகில் காட்டப்பட்டுள்ள இருவுருவங்களை அடையாளங் காணக்கூடவில்லை. சிதைந்துள்ளன. அமிர்தக் கலசத்தை கையில் ஏந்திக்கொண்டு தன்வந்திரி தேவர் வெளிப்படுகிறார்.
குறிப்புதவிகள்
கூர்மவதாரம்
சிற்பம்

கூர்மவதாரம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்