கல்வெட்டு
குடுமியான்மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடுமியான்மலை
ஊர் குடுமியான் மலை
வட்டம் புதுக்கோட்டை
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் குடுமியான்மலை உள்ளது. இவ்வூரில் உள்ள குடைவரைக் கோயில் 7 ஆம் நூற்றாண்டு இசைக்கல்வெட்டால் வரலாற்றுப் புகழுடையது. இம்மலையின் தென்மேற்கே பாறைச் சரிவில் இயற்கையான குகைத்தளம் உள்ளது. இங்குள்ள கல்வெட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அலுவலர்கள் பொ.இராசேந்திரன் சொ. சாந்தலிங்கம் ஆகியோரால் 1991 ல் கண்டறியப்பட்டது. தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறையினர் ஐராவதம் மகாதேவனுடன் மீளாய்வு செய்தபோது கல்வெட்டு முழுமையாகப் படிக்கப்பட்டது. மேற்சொன்ன குகைத்தளக் கற்படுக்கையில் இக்கல்வெட்டுள்ளது. மிகவும் தெளிவில்லாமல் எழுத்துக்கள் உள்ளன. இதன் காலம் சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும். ள், ந் எழுத்துக்கள் புள்ளியுடன் உள்ளன. ‘கொ' எழுத்தில் ஒகரக் குறிலைக் குறிக்கவும் புள்ளியுள்ளது. “நாழன் கொற்றந்தய் பளிய்“ என்பது இதன் வாசகம். நாழள் என்ற ஊரைச் சேர்ந்த கொற்றந்தை செய்த பள்ளி என்று பொருள்படும். ஞாழல் என்ற மலர் சங்க இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளது. இம்மலரின் பெயரில் அமைந்த ஊரே இங்கு நாழள் என்று குறிக்கப்பட்டுள்ளது எனலாம். இம்மலர் உடைய மரம் புலிநகக் கொன்றை, மயில் கொன்றை என்று தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. அந்தை மரியாதைக்குரிய சொல். கொற்றந்தை மரியாதைக்குரியவராக இங்கு காட்டப்பட்டுள்ளார்.
குறிப்புதவிகள்
குடுமியான்மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 825
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு