கல்வெட்டு
கண்ணனூர் பெரியகுளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கண்ணனூர் பெரியகுளம் |
|---|---|
| ஊர் | கண்ணனூர் |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | கண்ணனூர் பெரியகுளம் வடக்கு மடை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டைப் பகுதியில் ஏராளமான குளங்களும், ஏரிகளும் உள்ளன. பெரும்பாலும் இவை ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை. இவற்றுள் பலவற்றின் மதகுக் கட்டடங்களில் அம்மதகுகள் கல்லால் அமைக்கப்பட்ட செய்தி கல்லெழுத்துக்களில் பதிக்கப்பட்டுள்ளது. மதகின் உறுப்புக்கள் குமிழி, குமரிக்கல், மணவாளக்கல் என்று பெயர் கொண்டுள்ளன. புதுக்கோட்டை, திருமயம் வட்டம், கண்ணனூர் பெரியகுளத்து வடக்குமடையின் தரையில் கிடக்கும் சதுரக்கல்லில் உள்ள கல்வெட்டொன்று தென்னவன் பராந்தகதரையனான குன்றனூரனைச் சாத்தி என்பவரின் மகன் ஸ்ரீநரசிங்கப் பேரையனான அரையன் கண்ணனூர் பெரியகுளத்துக்கு குமிழி ஒன்றை கட்டுவித்த செய்தியைத் தெரிவிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 1, தமிழகத் தொல்லியல் கழகம், 1991
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |