Back
கல்வெட்டு
குடுமியான்மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடுமியான்மலை
ஊர் குடுமியான்மலை
வட்டம் குடுமியான்மலை
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் குடுமியான்மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
நீள் சதுர வடிவத்தில் கட்டம் கட்டிப் பல்லவ கிரந்தத்தில் 'பரிவாதினி' எனச் செதுக்கியுள்ளனர். 'பரிவாதினி' எனும் இந்த கிரந்த கல்வெட்டு வீணையொன்றைக் குறிப்பதாக இசை வல்லுநர்கள் கருதுகின்றனர். பரிவாதினி பற்றிய குறிப்புகள் அமரகோசத்திலும் அசுவகோசரின் புத்தசரித்ததிலும் காளிதாசரின் ரகுவம்சத்திலும் காணப்படுகின்றன. ஏழு தந்திகள் உள்ள வீணையாக அமரகோசம் இதைக் குறிப்பிடுகிறது. குடுமியான் மலையிலும் திருமெய்யத்திலும் அங்குள்ள இசைக்கல்வெட்டுகளுடன் தொடர்புடையதாய் உள்ளது. மகேந்திரன், தான் இயற்றிய மத்த விலாசப்பிரகசனத்தில், "இசை எனது செல்வம்' என வாயாரப் பாராட்டியுள்ளான். 'பொன் நரம்புகள் கொண்ட பரிவாதினி” என்ற வீணையை, வீணை வல்ல நங்கையர் ஒரு பெண் தன் ஆருயிர்த் தோழியை அனைத்துக் கொண்டு படுப்பது போல், அனைத்துக் கொள்வர்” எனப் புத்த சரித்திரத்தில் புகழப்படும் "பரிவாதினி” வீணையில், மகேந்திரவர்மன் வல்லவன்.
குடுமியான்மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001348/TVA_INS_001348_ப...

  • TVA_INS_001348/TVA_INS_001348_ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 324
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 9

தொடர்புடைய கல்வெட்டு