வரலாற்றுச் சின்னம்
கழுகுமலை சமணக்குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் கழுகுமலை சமணக்குடைவரை
அமைவிடம் கழுகுமலை சமணர் கோயில்
ஊர் கழுகுமலை
வட்டம் கோவில்பட்டி
மாவட்டம் தூத்துக்குடி
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
கழுகுமலை வெட்டுவான் கோயில் அருகே பாறை முகட்டில் புடைப்புச் சிற்பமாக சமணத் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுகிறது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளுடன் கூடிய சமணச் சிற்பங்களும் இங்கு உள்ளன. இவையாவும் கழுகு மலை கிபி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு முடிய சமணத் தொடர்பு மிக்கதாக விளங்கியமையை எடுத்துரைக்கின்றன. இங்கு இருபுறமும் சிம்மாசனத்தில் அமர்ந்த சிற்றுருவங்கள் மரங்களின் கீழ் காணப்படுகின்றன. மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் இயக்கன், இயக்கியின் உருவங்களும் இங்கு உள்ளன. ஒரு சிற்ப வரிசையில் தரனேந்திரயக்ஷனும், பத்மாவதியும் காணப்படுகின்றனர். தலைக்குமேல் படம் எடுத்தவாறு உள்ள நாகத்துடன் நின்ற கோலத்தில் உள்ள பார்சுவநாத தீர்த்தங்கரரின் உருவ அமைப்பு பாண்டியர்களின் கலைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இருபத்தி மூன்று சமணத் தீர்த்தங்கரர்களின் உருவங்களும் இங்கு வரிசையாக அமர்ந்துள்ள நிலையில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. கழுகுமலைக் கோயில் பாண்டியர்களின் அழகுமிகு கலைக்கோயில் எனலாம். நெடுஞ்சடையன் பராந்தகன் வரகுணனின் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கழுகுமலை வெட்டுவான் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
கழுகுமலை வெட்டுவான் கோயில் அருகே பாறை முகட்டில் புடைப்புச் சிற்பமாக சமணத் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுகிறது. வட்டெழுத்துக் கல்வெட்டுகளுடன் கூடிய சமணச் சிற்பங்களும் இங்கு உள்ளன. இவையாவும் கழுகு மலை கிபி. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு முடிய சமணத் தொடர்பு மிக்கதாக விளங்கியமையை எடுத்துரைக்கின்றன.
குறிப்புதவிகள்
கழுகுமலை சமணக்குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

  • TVA_MON_00082/TVA_MON_00082_தூ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 433
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்