வரலாற்றுச் சின்னம்
அப்துல்லாபுரம் அரண்மனை
தொல்லியல் சின்னத்தின் பெயர் அப்துல்லாபுரம் அரண்மனை
அமைவிடம் அப்துல்லாபுரம்
ஊர் அப்துல்லாபுரம்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.17-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         வேலூர்- பெங்களூர் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்துல்லாபுரம் கிராமம்,நெடுஞ்சாலை ஓரத்தில் அழகிய வேலைப்பாடுள்ள இடிந்த கட்டிடம். கி.பி.1605 முதல் கி.பி.1646 வரை விசயநகரப் பேரரசின் கீழ் இருந்த வேலூர் கோட்டை பீஜப்பூர் சுல்தான் அடில்சாகி கைப்பற்றி ஆண்டார். இவர் வழி வந்தவரே அப்துல்லாகான். கி.பி.1676 ல் மராட்டிய மன்னர் சிவாஜி செஞ்சியை வென்று தன் சகோதரர் துக்கோஜியிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.  இதே ஆண்டில் துக்கோஜி வேலூரை ஆண்ட சுல்தான் அப்துல்லாகானைத் தோற்கடித்து வேலூரையும், கோட்டையையும் கைப்பற்றினார்.தோல்வியுற்ற அப்துல்லாகான் வேலூரை விட்டு 5 கி.மீ. தள்ளி ஒரு சிறிய அரண்மனை உருவாக்கி, தன் ராஜ்ஜியத்தை சுருக்கி வாழ்ந்து மறைந்தார். இந்த அரண்மனை எதிரே அவர் கல்லறை அமைக்கப்பட்டது.

அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் திரு. சரவணன் ராஜா
குறிச்சொற்கள்
சுருக்கம்

          வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரம் ஊரில் உள்ள  சிதிலமடைந்த நிலையில் உள்ள பீஜப்பூர் சுல்தான்களின் வழிவந்தவரான அப்துல்லாகான் என்பவரின் அரண்மனையாகும்.

அப்துல்லாபுரம் அரண்மனை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    9 Files

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

  • TVA_MON_00040_அப்துல்...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 04 Feb 2019
பார்வைகள் 238
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்