வரலாற்றுச் சின்னம்
ஜம்புநாதர் குடைவரைக் கோயில்
தொல்லியல் சின்னத்தின் பெயர் ஜம்புநாதர் குடைவரைக் கோயில்
அமைவிடம் திருவெள்ளறை
ஊர் திருவெள்ளறை
வட்டம் திருச்சி
மாவட்டம் திருச்சி
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         திருச்சி வெள்ளறைச் சாலையில் வெள்ளறைக்குச் சற்று முன்னால் இடப்புறத்தே காட்சித்தரும் சிறு குன்றில் அமைந்துள்ளது வடஜம்புநாதர் குடைவரை. இருபுறத்தும் அமைந்த படியமைப்புடன் மதிலால் சூழப்பட்டுள்ள இக்கோயில் வளாகத்தின் தென்மேற்கிலுள்ள ஒருதள நாகரத் திருமுன்னில் விநாயகர் இடம்பெற்றுள்ளார். தாய்ப்பாறையில் வெட்டப்பட்டுள்ள பிள்ளையார் மற்றும் விஷ்ணுவின் சிற்பங்கள் பாண்டியர் கலைப்பாணியைப் புலப்படுத்துபவை. அகிலாண்டேசுவரி, இரண்டு நந்திகள் , சிவப்பெருமான் , ஆறுமுகனுடன் வள்ளி முதலிய சிற்பங்கள் அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்காலச் சோழர் பாணியைக் காட்டுகின்றது. வாயிற்காவலர்களின் எழில் சோழர் கலைப்பாணியாகும். கோயில் வளாகத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் இரண்டு எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் ஜம்பு முனிவர் , பைரவர் , ஆலமர் அண்ணல், அப்பர், சண்டேசுவரர், மகிஷமர்த்தினி ஆகிய பிற சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. குடைவரை இறைவனைச் சுட்டும் பழைமையான் கல்வெட்டு முதலாம் வரகுணருடையதாக் இருப்பதாக கருதப்படுவதால், கி.பி எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் இக்குடைவரை அகழப்பட்டதாகக் கொள்ளலாம்.

அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் திருப்பைஞ்ஞீலி, சமயபுரம், திருவானைக்கா, திருவெள்ளறை ஸ்வஸ்திகா கிணறு
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் திரு. கிரிஷ் கோபிநாத்
குறிச்சொற்கள்
சுருக்கம்

         திருச்சி வெள்ளறைச் சாலையில் வெள்ளறைக்குச் சற்று முன்னால் இடப்புறத்தே காட்சித்தரும் சிறு குன்றில் அமைந்துள்ளது வடஜம்புநாதர் குடைவரை.

ஜம்புநாதர் குடைவரைக் கோயில்
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    22 Files

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

  • TVA_MON_00036_ஜம்புநா...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 04 Feb 2019
பார்வைகள் 165
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்