சிற்பம்

விஷ்ணு

விஷ்ணு
சிற்பத்தின் பெயர் விஷ்ணு
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
மது கைடபர்கள் விஷ்ணுவோடு சண்டையிடும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
மஹாவிஷ்ணு ஜலப்ரளயத்திலிருக்கும்போது, தொப்புள்ளிலிருந்து தாமரை வெளிவர, அதிலிருந்து ப்ரம்மா உருவானார். முற்றிலும் ஜலப்ரளயம். பூமி கோளகள் இல்லாத நேரம், அச்சமயம் விஷ்ணுவின் காதிலிருந்து மது கைடபர் என இரண்டு அசுரர்கள் உருவாயினர். மஹாவிஷ்ணுவின் நாபிக் கொடியிலிருந்து மலர்ந்த தாமரையில் ப்ரம்மா உருவானார்;; இரண்டு நீர்துளிகள்--இவையும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டவை;; இவை தாமரை மலரில் விழ, ஒன்று மதுவாகவும்(தேன்,தமஸ் குணம்), மற்றொன்று கைடபராகவும்(ரஜோ குணத்துடன்) உருவாயினர்..( சாந்தி--348); ஜலப்ரளயத்தில் பிறந்ததனால் நீரிலேயே வளர்ந்தனர்;; எவ்வாறு ப்ரளயம் உருவாயிற்று என இருவரும் எண்ண, தேவி இவர்கள் முன்தோன்றி, " வாக்பீஜ" மந்திரத்தை அருளினார்;; இதை இருவரும் பல ஆண்டுகள் உச்சாடனம் செய்ய, தேவியின் அருளைப் பெற்றனர்;; இதன் மூலம் இறவா வரம் பெற்றனர்;; இவர்கள் நினைத்தபோது இறக்ககூடிய வரத்தையும் பெற்றனர்;; இவர்கள் ப்ரம்மனிடமிருந்து நான்கு வேதங்களையும் திருடி, பாதாளம் சென்றனர்;;ப்ரம்மன் போரிட பயந்து, விஷ்ணுவிடம் கூற,அவர் போரிட, அவர் தோற்றுவிடுவார் போன்ற, சூழ்நிலை உருவாக, அவர் தேவியின் உதவியை நாடினார்;; அவள் அவர்களை தந்திரத்தினால் தான் ஜெயிக்கமுடியும் என்றாள்;; அதன்படி விஷ்ணு அவர்களிடம் என்ன வரம் வேண்டும் என கேட்க, அவர்கள்"உன்னை விட நாங்கள் தான் பெரியவர்கள் ,ஆகையால் நீ வரம் கேள் தருகிறோம்" என்றனர்;; இது தான் தக்க தருணம் என எண்ணி விஷ்ணு அவர்களிடம், அவர்களது உயிரையே கேட்க,அவர்களும் வேறு வழியில்லாமல் அளித்தனர்;; அதன்படி அவர்கள் தண்ணிரை தவிர வேறு, எங்கு வேண்டுமானாலும் இறக்க தயார் என்றனர்;; விஷ்ணுவை அவர்கள் சாமானியன் என நினைத்து, இப்படி கேட்க, அவர் தனது தொடையை, நீருக்கு வெளியே பல யோஜனை தூரம் நீட்ட,அவர்களும் தங்கள் உடல்களை உயர்த்த, கடைசியில் விஷ்ணு'அவர்களது தலைகளை தனது தொடையில் வைத்து, சக்கரத்தால் துண்டித்தார்;; இதனால் கடல் முழ்வதும், இவர்களின் சதை(மேதஸ்)பிண்டங்கள் இருக்க, அதுவே பூமியாயிற்று. சதையினால் உருவானதால்,பூமியை "மேதினி" எனவும் அழைப்பர். விஷ்ணு பாற்கடலில் பாம்பணையில் அறிதுயிலில் உள்ளார். அவரின் காலடியில் மது கைடபர்கள் ஆகிய இரு அரக்கர்கள் அவரைக் கொல்லக்கூடிய துணிவுடன் நிற்கின்றனர்.
குறிப்புதவிகள்
விஷ்ணு
சிற்பம்

விஷ்ணு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்