சிற்பம்

பைரவர்
சிற்பத்தின் பெயர் | பைரவர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | புள்ளமங்கை |
ஊர் | பசுபதி கோயில் |
வட்டம் | பாபநாசம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
விளக்கம்
திருக்கோயிலின் காவல் தெய்வமான, சிவ வடிவங்களுள் ஒன்றான பைரவர்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
புள்ளமங்கை திருக்கோயிலின் சுற்றுப்பிரகார மண்டபத்தில் அம்மன் சந்நிதிக்கு இடதுபுறம் உள்ள சிறு தளத்தில் மேற்கு நோக்கி பைரவர் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. மேல்நோக்கி விரிந்து பரந்த தீச்சுடர் முடிக் கற்றைகளுடன், நான்கு திருக்கைகளில் உடுக்கை, நாகம், சூலம், கபாலம் ஏந்தியவராய், வெளியே நீட்டியுள்ள கோரைப் பற்களுடன் ஆடையின்றி நின்ற நிலையில் பைரவர் உள்ளார். சடைக்கற்றைகளில் நாகங்கள் காட்டப்பட்டுள்ளன. காதுகளில் பத்ரகுண்டலங்கள் விளங்க, கழுத்தணிகளாக கண்டிகை, சரப்பளியும், கைகளில் கேயூரம், முன் வளைகளும், உடலைச் சுற்றி கணுக்கால் வரை செல்லும் வீரச்சங்கிலி, வயிற்றில் உதரபந்தம், மார்பில் முப்புரி நூல் (யக்ஞோபவீதம்) மற்றும் கால்களில் வீரக்கழல்களும், பாடகமும் அணிந்துள்ளார். நேராக சமபாதத்தில் நிற்கும் பைரவரின் பின்புறம் நாய் காட்டப்பட்டுள்ளது. நெரித்த புருவமும், உருட்டிய விழிகளும் விடைத்த மூக்கும், கோரப்பற்கள் வெளியே நீண்டு, சற்று பிளந்த உதடுகளுமாய் உக்ர தேவதையாய் பைரவர் காட்சியளிக்கின்றார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |