சிற்பம்
அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வரர்
சிற்பத்தின் பெயர் | அர்த்தநாரீஸ்வரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
ஊர் | கும்பகோணம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
விளக்கம்
கருவறை விமானம் மேற்கு தேவகோட்டத்தில் நிற்கும் அம்மையப்பர்
|
|
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இச்சிற்பம் சக்தியும் சிவமும் இணைந்து இப்பிரபஞ்சத்தைச் செலுத்துவதாகக் குறித்துக் காட்டுவதாகும் மற்றும் உயிர்களைப் படைத்தல் ஆண் பெண் சமத்துவத்தை உலகுக்குரைக்கும் சிறப்பு பெற்றது. அர்த்தம் என்பது பாதி; நாரி என்பது பெண். சிவனின் ஆண் உருவம் பாதியும், பார்வதியின் பெண்ணுருவம் பாதியும் கொண்டு ஆண் கூறு வலப்பக்கமும்,பெண் கூறு இடப்பக்கமும் அமைகின்றது. சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவனில்லை என்பதனை விளக்குகின்ற உருவாகும். அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். "நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்" என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது. "பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது. தேவாரப் பதிகங்களிலும் "வேயுறு தோளி பங்கன்", "வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர்" எனப்படுவது உமையொரு பாகனேயேயாம். குடந்தைக் கீழ்க்கோட்டம் கருவறை விமானத்தின் மேற்குப்புற தேவகோட்டத்தில் நந்தி வாகனத்தின் மீது சாய்ந்த நிலையில் உமையொருபாகர் காணப்படுகிறார். வலது முன்கை முழங்கையை நந்தியின் மீது ஊன்றியுள்ளார். வலது மேற்கை மழுவைத் தாங்கியுள்ளது. உமைக்குரிய இடது பாகத்தில் ஒரு கை மட்டுமே காட்டப்பட்டுள்ளது. உமையாள் வளைந்த இடையில் முழங்கையை ஊன்றி, கையில் மலரைப் பிடித்துள்ளாள். பொன்மணித் தோள்வளை, நூபுரம் கால்களில் பொன்னிறக் கைகளில் கொஞ்சிடும் கங்கணம் துன்னிடும் நாகமே தோள்வளை யாகுமே தூயவன் பாதமும் பூணுமே நாகமே என்று அம்மையப்பரின் அணிகள் ஆதிசங்கரரால் வருணிக்கப்படுகின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அர்த்தநாரீஸ்வரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |