சிற்பம்

கணபதி

கணபதி
சிற்பத்தின் பெயர் கணபதி
சிற்பத்தின்அமைவிடம் குன்னாண்டார் கோயில்
ஊர் குன்னாண்டார் கோயில்
வட்டம் கீரனூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை கணாதிபத்யம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
அன்னையர் எழுவரோடு உடன்கூட்டமாய் கணபதி அமர்கோலம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கணபதி கரண்ட மகுடம் தரித்துள்ளார். அகன்ற, திறந்த முறச் செவிகள் உடையவராய் விளங்கும் கணபதி துதிக்கையில் பழம் போன்ற ஒன்றைக் கொண்டுள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் அங்குசம், பாசத்தைக் கொண்டுள்ளார். முன் வலது உள்ளங்கையில் இருப்பது மோதகம் அல்லது மாதுளை அல்லது மாங்கனியாய் இருக்கலாம். இடது முன் கையில் உள்ளது மோதகமாய் இருக்கலாம். கழுத்தில் சரப்பளி எனப்படும் அகன்ற அணி அழகு செய்கின்றது. முப்புரி நூல் இடது தோள் வழியே உடலின் பின்புறம் செல்கிறது. கைகளில தோள்வளை, முன் வளைகளான கங்கணங்கள் அணிந்துள்ளார். இடையில் அரையாடையும், இடைக்கட்டும் காணப்படுகின்றன.வலது காலை குத்திட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். இயல்பான மானிட வடிவாய் உடலமைப்பு காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கணபதி
சிற்பம்

கணபதி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்