சிற்பம்

கணபதி

கணபதி
சிற்பத்தின் பெயர் கணபதி
சிற்பத்தின்அமைவிடம் முக்தேஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை கணாதிபத்யம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
தென்புற அர்த்த மண்டபக் கோட்டத்தில் அமைந்துள்ள அமர்நிலை கணபதி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கணபதி இடது காலை குத்திட்டு, வலதுகாலை மடக்கி அமர்ந்துள்ளார். இடப்புறம் தலையைத் திருப்பி பக்கவாட்டு அமைப்பைக் கொண்டுள்ளார். கணபதியின் தலைக்கு மேல் குடை ஒன்று உள்ளது. கரண்டமகுடராய் உள்ளார். பின்கைகளில் அங்குசமும் பாசமும் விளங்க, முன்னிரு கைகளில் இடது கை இடது தொடையின் மேலிருக்க, வலது கை சிதைந்துள்ளது. கால்களும் முகவும் பெருமளவு சிதைந்துள்ளன. விநாயகரின் வயிற்றில் காட்டப்பட்டுள்ள உதரபந்தம் என்னும் வயிற்றினையும் மார்பையும் பிரித்துக் காட்டும் அணி கணபதியின் அமர்வுக்கேற்ப மேலேறேியுள்ளது. தடிமனான முப்புரிநூல் இடது மார்பின் வழி செல்கிறது. கணபதியின் இருபுறமும் உள்ள பக்கவாட்டு சிறு கோட்டங்களில் இரண்டிரண்டாக நான்கு கணங்கள் காட்டப்பட்டுள்ளன. மேலிரு கணங்கள் உணவுப் பொருட்களை காணிக்கையாக கையில் வைத்துள்ளன. கீழிரு கணங்களில் கணபதியின் வலப்பக்கம் உள்ள கணம் கையில கதாயுதத்துடன் நிற்கிறது. இடது பக்கம் மேலே உள்ள கணம் தலையில் பலாப்பழத்தை வைத்துள்ளது. கீழே உள்ள கணம் மிகவும் சிதைந்துள்ளது.
குறிப்புதவிகள்
கணபதி
சிற்பம்

கணபதி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்