சிற்பம்
கணபதி
கணபதி
| சிற்பத்தின் பெயர் | கணபதி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |
| ஊர் | மலையடிப்பட்டி |
| வட்டம் | கீரனூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | கணாதிபத்யம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
|
விளக்கம்
அன்னையர் எழுவர் தொகுதியில் உடன் வீற்றிருக்கும் கணபதி
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கணபதி பூரிம மகுடம் தரித்துள்ளார். அகன்ற, திறந்த முறச் செவிகள் உடையவராய் விளங்கும் கணபதி, வலதுபுறம் திரும்பியுள்ள துதிக்கையில் பழம் போன்ற ஒன்றைக் கொண்டுள்ளார். நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் அங்குசம், பாசத்தைக் கொண்டுள்ளார். முன் வலது உள்ளங்கையில் இருப்பது மோதகம் அல்லது மாதுளை அல்லது மாங்கனியாய் இருக்கலாம். இடது முன் கையை தொடை மீது வைத்துள்ளார். கழுத்தில் சரப்பளி எனப்படும் அகன்ற அணி அழகு செய்கின்றது. மார்பில் துணியாலான முப்புரி நூல் இடது தோள் வழியே உடலின் பின்புறம் செல்கிறது. கைகளில் தோள்வளை, முன் வளைகளான கங்கணங்கள் அணிந்துள்ளார். இடையில் அரையாடையும், இடைக்கட்டும் காணப்படுகின்றன.வலது காலை குத்திட்டு இடது காலை மடக்கி அமர்ந்துள்ளார். இயல்பான மானிட வடிவாய் உடலமைப்பு காட்டப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
கணபதி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 73 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |