சிற்பம்
உச்சிஷ்ட கணபதி
சிற்பத்தின் பெயர் உச்சிஷ்ட கணபதி
சிற்பத்தின்அமைவிடம் திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
ஊர் திருநல்லூர்
வட்டம் வலங்கைமான்
மாவட்டம் திருவாரூர்
அமைவிடத்தின் பெயர் திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை கணாதிபத்யம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
கணபதி நான்கு திருக்கைகளுடன் அமர்ந்த கோலம். இடது தொடை மீது தேவியை அமர்த்தி முன் இடது கையால் அணைத்துள்ளார். முன் வலது கையில் கனி உள்ளது. பின்னிரு கைகளில் அங்குசம், பாசம் விளங்குகின்றன. துதிக்கையால் தேவியின் யோனியைத் தொடுவதாக அமைக்கப்படுவது உச்சிஷ்ட கணபதியின் சிற்ப மரபாகும். உச்சிஷ்ட கணபதி வழிபாடு தாந்திரீக மந்திர சடங்குகளோடு தொடர்புடைய வளமைப் பேற்றிற்கான ஒன்றாகும்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தாந்திரீக வழிபாட்டின் ஒருகூறாக உச்சிஷ்ட கணபதி வழிபாடு திகழ்கிறது. உச்சிஷ்ட கணபதி தனது இடது தொடையில் அமர்த்தியுள்ள தேவியின் யோனியில் தனது துதிக்கையை வைத்தமையாக யோனி பூசையைக் குறிப்பதாக இச்சிற்பம் அமைக்கப்படுவது மரபு.
குறிப்புதவிகள்
உச்சிஷ்ட கணபதி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்