சிற்பம்
கணபதி
சிற்பத்தின் பெயர் கணபதி
சிற்பத்தின்அமைவிடம் அரிட்டாப்பட்டி சிவன் குடைவரை
ஊர் அரிட்டாப்பட்டி
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் கருவறை நுழைவாயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
விளக்கம்
அரிட்டாப்பட்டி சிவன் குடைவரை 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. இக்குடைவரையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள கணபதியின் உருவம் மிகுந்த எதார்த்த கலைத்தன்மை வாய்ந்தது. சிறுகுழந்தை ஒன்று கால்களை மடித்து அமர்ந்து கைகளை மடக்கியிருக்கும் தோற்றத்தில் பார்ப்பவரை அள்ளி அணைக்கச் சொல்லும் பாவனையில் இந்த கணபதி சிற்பம் அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும். கணபதி நான்கு திருக்கைகள் கொண்டுள்ளார். முன்னிரு கரங்களில் வலதில் மாதுளையும், இடது கையில் உடைந்த கொம்பை எழுத்தாணியாகவும் வைத்துள்ளார். பின்னிரு கைகள் அங்குசம், பாசம் ஏந்தியுள்ளன. பூரிம மகுடராய், முறச்செவியராய், வலம்புரி துதிக்கையராய் அமர்ந்துள்ள கோலம் பாண்டியர் கலைகளின் மகுடத்தில் விளங்கும் முத்தாகும்.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டி என்னும் சிற்றூரின் மேற்கில் 2 கி.மீ. தொலைவில் அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் கழிஞ்சமலையில் அமைந்துள்ளது. இக்குடைவரைக் கோயில் கி.பி.8-ஆம் நூற்றாண்டளவில் முற்காலப் பாண்டியர்களால் சிவனுக்காக குடைவிக்கப்பட்டது. இக்குடைவரையின் கருவறையின் முன்புறம் இருபுறமும் இலகுளீசர் மற்றும் கணபதி உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கணபதியின் உருவமைதி எழில் வாய்ந்த கோலம் கொண்டது. புடைப்புச் சிற்பமாக உள்ள பிள்ளையார் வடிவம் பெரிய அளவாக அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கணபதி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்