சிற்பம்
கணபதி
கணபதி
சிற்பத்தின் பெயர் | கணபதி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருமூலநாதர் கோயில் |
ஊர் | பேரங்கியூர் |
வட்டம் | திருவெண்ணெய்நல்லூர் |
மாவட்டம் | விழுப்புரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | கணாதிபத்யம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
விளக்கம்
சிவனாரைப் போன்று கரங்களில் மான், மழுவையேந்தியுள்ள கணபதி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாமரைப் பீடத்தின் மீது அமர்ந்துள்ள கணபதியின் தலைக்கு மேலே குடை காட்டப்பட்டுள்ளது. குடைக்கு கீழே இருபுறமும் சாமரங்கள் காணப்படுகின்றன. இடது காலை குத்துக்காலிட்டு, வலது காலை மடக்கி அமர்ந்துள்ள கணபதி, உடலை நேராகவும், தலையை பக்கவாட்டிலும் திருப்பியுள்ளார். நான்கு திருக்கரங்களில் மேலிரு கைகளில் மழுவையும், மானையும் பிடித்துள்ளார். வலது முன் கை வலத்தொடையில் இருத்தி, மோதகம் அல்லது கனி ஒன்றை உள்ளங்கையில் வைத்துள்ளார். இடது முன்கை இடது முழங்காலின் அருகே பற்றிய படி உள்ளது. துதிக்கையில் இருப்பது அமுத கலசம் அல்லது கனியாய் இருக்கலாம். பூரிம மகுடம் அணிந்துள்ள கணபதிக்கு தொய்யலுடன் கூடிய நெற்றிப்பட்டை அழகு சேர்க்கின்றது. முறச் செவியர் கழுத்தில் சவடியும், கைகளில் தோள் வளையான கேயூரமும், ஒற்றை முன் வளையும் அணிந்துள்ளார். பருத்த வயிற்றில் உதரபந்தமும், மார்பில் முரிநூலும் காட்டப்பட்டுள்ளன. சிவபெருமான் தன் கைகளில் பற்றியுள்ள அவரது கருவிகளான மான், மழுவை இச்சிற்பத்தில் விநாயகர் பிடித்துள்ளார். இதுவே இச்சிற்பத்தின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பாகும்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கணபதி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |