சிற்பம்
நிருத்த கணபதி
நிருத்த கணபதி
சிற்பத்தின் பெயர் | நிருத்த கணபதி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |
ஊர் | மலையடிப்பட்டி |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | கணாதிபத்யம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
கணங்களின் தலைவனும், சிவ செல்வனும், உமை மைந்தனுமாகிய கணபதியின் ஆடல் - புடைப்புச் சிற்பம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கணபதியின் 32 திருவுருவங்களுள் நிருத்த கணபதி வடிவமும் ஒன்றாகும். இவ்வடிவம் கணபதியின் ஆடல் நிலையைக் குறிக்கிறது. பொன் மஞ்சள் நிற மேனியுடையவர் மீது வலது காலைச் சற்று வளைத்து ஊன்றியவாறும், இடது காலை மேலே தூக்கி ஆடல் புரிகிறார். வலது பின் கை ஆடலுக்கேற்றவாறு நீண்டுள்ளது. துதிக்கை இடது கையில் உள்ள மோதகத்தை எடுக்கிறது. பின் இடது கையில் அங்குசத்தைக் கொண்டுள்ளார். வலது முன் கையில் உள்ளது என்னவென்று அறியக்கூட வில்லை. வயிற்றில் பட்டையான உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. அரையாடையும, கடி பந்தமும் இடையில் காட்டப்பட்டுள்ளன. மார்பில் முப்புரி நூல அணிந்துள்ளார். கரண்ட மகுடம் தரித்துள்ளார். நிருத்த கணபதி ஆடல் கரணத்தில் காட்டப்படும் விநாயகரின் வடிவமாகும். இவரைப்பற்றிய குறிப்புகள் லிங்கபுராணம் சிவபுராணம், வராகபுராணம், மத்சயபுராணம், விநாயகபுராணம், முத்கலபுராணம், கந்தபுராணம் பிரமாண்டபுராணம், பவிஷ்யபுராணம் ஆகிய புராணங்களிலும், உத்தரகாமிக்காகமம், சுபரபேதாகமம் ரூபமந்தணம் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நிருத்த கணபதி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |