சிற்பம்

தாய்தெய்வம்

தாய்தெய்வம்
சிற்பத்தின் பெயர் தாய்தெய்வம்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதியாக மரத்தினடியில் அமர்ந்துள்ள தாய்த்தெய்வம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
மரத்தின் கீழே பெண் தெய்வம் அமர்ந்திருக்கும் காட்சி. இரண்டு கால்களையும் தொங்கவிட்டு, இடது கையை ஊன்றி, வலது கையை உயர்த்தியபடி உள்ளார். அன்னைக்கு கரண்டமகுடம் தலையலங்காரமாய்த் திகழ்கிறது. அரையாடை இடையிலும், மார்புக் கச்சையும் அணிந்துள்ளார். கழுத்தில் அணிகள் திகழ்கின்றன. நீள்காதுகள் அமைந்துள்ளன. இடையாடையின் முடிச்சுகள் கீழே தொங்குகின்றன. அன்னையின் வலதுபுறம் பணிப்பெண் ஒருவர் நின்ற நிலையில் உள்ளார். இடது மேற்புறத்தில் யோகபட்டத்தில் அமர்ந்த நிலையில் உள்ள ஆண் இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் அமர்ந்துள்ளார். இவர் அரசராயிருக்கலாம். நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆடையணிகளைக் கொண்டுள்ளார். யானையின் உருவம் ஒன்று படுத்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. அதற்கு கீழே இரண்டு யானைகள் உள்ளன.
குறிப்புதவிகள்
தாய்தெய்வம்
சிற்பம்

தாய்தெய்வம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்