சிற்பம்

அகத்தியர்

அகத்தியர்
சிற்பத்தின் பெயர் அகத்தியர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
கயிலையிலிருந்து தெற்கு நோக்கி வந்த அகத்திய குறுமாமுனி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கயிலையில் பார்வதி பரமேச்சுவரரின் திருமணத்தைக் காண கூடிய கூட்டத்தால் வடக்கு தாழ்ந்தது. இதனை சமநிலையாக்க சிவனார் அகத்தியரை தென்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியரும் பொதிகை மலையில் அமர்ந்து பல்வேறு ஞான உபதேசங்களைக் கூறியும், தமிழ் மொழியை வளர்த்தும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொண்டாற்றினார். பீடத்தில் வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் சுகாசனத்தில் அமர்ந்துள்ள குறுமுனி வலது கையை கடக முத்திரையாகவும், இடது கையை இடது தொடையில் வைத்தவாறும அமர்ந்துள்ளார். நீண்ட மகுடம் அணிந்துள்ளார். பருத்த வயிறுடனும், தாடி, மீசையுடனும் காணப்படுகிறார். பட்டையான முப்புரிநூல் இடது மார்பின் வழி உடலின் பின்புறம் செல்கிறது. தோள்வளை, முன்வளை அணிந்துள்ளாளர். மார்பில் நீண்ட சரமாலை அழகு செய்கிறது. நீள்காதுகளில் அணிகள் திகழ்கின்றன. குறுமுனியின் பின்னால் இருபுறமும் பக்கத்திற்கு இருவராக நால்வர் இருகைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் காட்டப்பட்டுள்ளனர். நன்கு அலங்கரிக்கப்பட்ட தலைமகுடங்கள், கழுத்தணிகள், கையணிகள் அந்நால்வருக்கும் அணியப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
அகத்தியர்
சிற்பம்

அகத்தியர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்