சிற்பம்
திரிபுராந்தகர்
திரிபுராந்தகர்
சிற்பத்தின் பெயர் | திரிபுராந்தகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
முப்புரம் எரிக்க புறப்படும் முக்கண்ணர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இடது காலை பீடத்தின் மீது வைத்தவாறு வலது காலை ஊன்றி ஊர்த்துவஜானுவில் நிற்கும் சிவனார் அசுரர்களின் தங்கம், வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அழிக்க புறப்படும் காட்சி. இச்சிற்பம் மேலே சுதை பூசப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. அரையாடை அணிந்துள்ள முப்புரம் எரித்த முக்கண்ணரின் ஜடாபாரம் முகப்புடன் விளங்குகின்றது. இடது கையில் வில்லைத் தாங்கியுள்ளார். அவருக்கருகே பணிவான சிறிய உருவினராய் மழுவைத் தாங்கி நிற்கும் சண்டிசுவரர், கீழே ஆண் உருவம் ஒன்று வியப்பு முத்திரையைக் காட்டுகின்றது. சிரிப்பாலே எரித்த பிரானின் முகத்தில் புன்னகை தவழ்கிறது. இடது தோள் வழியே முப்புரி நூல் செல்கிறது. ஆடை குறங்குச்செறியாக முன் தொங்குகின்றது. முப்புரமெரித்தவரின் பின்புறம் காட்டப்பட்டுள்ள உருவங்கள் சிதைந்துள்ளன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
திரிபுராந்தகர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |