Back
சிற்பம்

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பத்தின் பெயர் கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
உமையஞ்ச ஆனையுரித்த தேவர் யானையின் உடலை உரித்து நிற்கும் வதைக்காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சம்ஹார மூர்த்தங்களுள் ஒன்றான இறைவனின் அட்ட வீரட்ட செயல்களில் ஒன்றான ஆனையை உரித்து வதைக்கும் காட்சி உமையாள் அஞ்சிக் கொண்டு காணுவதாக வடிக்கப்பட்டுள்ளது. ஆனையை உரிக்கும் இறைவனின் வலிமையை உணர்த்தும் சிற்பமாகவும், உமை வியந்து, அஞ்சிட நிற்பதாகவும் இச்சிற்பம் வடிக்கப்படுவது இயல்பு. வலது காலை நிலத்தில் ஊன்றி, இடது காலை யானையின் தலைமேல் வைத்தவாறு (ஊர்த்துவஜானு) பத்து திருக்கைகளுடன் ஆனையுரித்த பிரான் விளங்குகிறார். கைகளில் முன்வளை, தோள்வளை, தோள்மாலை காட்டப்பட்டுள்ளன. ஜடாபந்தம் தலையணியாகக் கொண்டு, அரையாடை அணிந்து, இடையாடை முன் விழ, தனது இடது முன் கையில் அங்குசத்தைப் பிடித்துள்ளார். நீண்ட சூலம் வலது மேற்கையில் வைத்துள்ளார். இடது மேற்கை வியப்பு முத்திரையைக் காட்டியபடியும், மற்றொரு இடது கை எச்சரிக்கை முத்திரை காட்டியபடியும் உள்ளன. மேலிரு கைகள் யானையின் தோலை உரித்தவாறு இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. அதிவீரச் செயலை காணும் தேவி அருகில் மிரண்டு ஓடும் நிலையில் உள்ளாள். இரு கைகளில் வலது கை அமைதி முத்திரையாகவும், வலது கை முன்வளைந்து ஆடையை பிடித்தபடியும் உள்ளது. கால்கள் ஸ்வஸ்திகமாய் ஓடும் நிலையில் உள்ளன.
குறிப்புதவிகள்
கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பம்

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்