சிற்பம்

திரிவிக்கிரமர்

திரிவிக்கிரமர்
சிற்பத்தின் பெயர் திரிவிக்கிரமர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
மாவலி சக்கரவர்த்தியிடம் வாமனனாய் வந்து மூன்றடி மண் கேட்டு ஓங்கி உலகளந்த பெருமாள் திரிவிக்கிரமர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
ஓங்கி உலகளந்த உத்தமன் பத்து திருக்கைகளுடன் இடது காலை ஆகாயத்திற்கு உயர்த்தியுள்ளார். சங்கு, சக்கரம், வில், அம்பு, கதை, வாள், வியப்பு முத்திரை, மலர்ப்பிடி முத்திரை, வியாக்கியான முத்திரை ஆகியவை கையமைதிகளாக காட்டப்பட்டுள்ளன. கிரீட மகுடமணிந்து, காதுகளில் மகரகுண்டலங்கள் விளங்க, கழுத்தில் சவடி, கண்டிகை ஆகிய அணிகள் அழகு செய்ய, கணுக்கால் வரை பட்டாடை உடுத்தியவராய், இடையாடையின் முடிச்சுகள் ஊன்றிய இடதுகாலில் படுமாறு ஓங்கி உயர்ந்துள்ளார். இறைவனின் தோள்களில் வகுளமாலை காட்டப்பட்டுள்ளது. கடகவளை, முன்வளைகள் கைகளில் தெரிகின்றன. வலதுபுறம் மாவலி சக்கரவர்த்தி இரண்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளான். இக்காட்சியைக் கண்டு மிரண்டு ஓடுவதாக ஓர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
திரிவிக்கிரமர்
சிற்பம்

திரிவிக்கிரமர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்