சிற்பம்

வீரபத்திரர்

வீரபத்திரர்
சிற்பத்தின் பெயர் வீரபத்திரர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
தட்சனின் யாகத்தை அழிக்க சிவனாரால் ஏவப்பட்ட சிவவடிவங்களுள் ஒன்றான வீரபத்திரர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வீரபத்திரர் இடது காலை பீடத்தின் மீது வைத்து தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளார். அடர்ந்த ஜடாபாரத்தின் முன் நெற்றியில் தலையணி திகழ்கிறது. கழுத்தில் பதக்கத்துடன் கூடிய சவடி, நீண்டு வயிறு வரை தொங்கும் ஆரம் ஆகியன கழுத்தணிகளாக அமைந்துள்ளன. நான்கு திருக்கைகளில் முன்வளை, கடகவளை, தோள்வளை ஆகியன காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ளார். வீரச்சங்கிலி இடது தோளிலிருந்து வலது கால் வரை நீண்டு செல்கிறது. வெகுண்டெழும் வீரபத்திரரின் கோபக் கனலைக் கண்டு பயந்த தேவர்கள் நடுநடுங்கி நிற்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது. வீரபத்திரரின் சூலாயுதத்திற்குக் கீழே இரண்டு உருவங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. வலது முன்கை சூலத்தை ஓங்கியபடியும், இடது முன்கை எச்சரிக்கும் முத்திரை (தர்ஜனி) காட்டியபடியும் உள்ளன.
குறிப்புதவிகள்
வீரபத்திரர்
சிற்பம்

வீரபத்திரர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்