சிற்பம்
கண்ணப்பர்
கண்ணப்பர்
சிற்பத்தின் பெயர் | கண்ணப்பர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | திருவாலீஸ்வரம் |
வட்டம் | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | திருநெல்வேலி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
விளக்கம்
முக்கண்ணருக்கு கண் கொடுத்த கண்ணப்ப நாயனார்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார். திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு). சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார். திருவாலீஸ்வரம் கைலாச நாதர் கோயிலில் விமானத்தின் தளத்தில் கண்ணப்பர் சிவபெருமானுக்கு கண் கொடுத்த காட்சி சிற்பமாக உள்ளது. சிவபெருமான் இலிங்க வடிவில் உள்ளார். இலிங்கத்தின் முன்னால் கண்ணப்பர் கருடாசனத்தில் அரை மண்டியிட்ட நிலையில் தன் வலது கையில் உள்ள அம்பினால் இடது கண்ணை தோண்டுகிறார். கண்ணப்பர் வேடுவர் என்பதால் இடையில் வாள், குறுவாள் செருகியுள்ளன. பின்னந்தலையில் கொண்டை காட்டப்பட்டுள்ளது. தொடை வரையிலான அரையாடை அணிந்துள்ளார். முன் கைகளில் மூன்று வளைகள் காட்டப்பட்டுள்ளன. கண்ணப்பர் முக்கண்ணருக்கு கண் கொடுக்கும் காட்சியை பின்புறமிருந்து கை கூப்பி வணங்கிய நிலையில் சிவகோசரியார் காண்கிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
கண்ணப்பர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |