சிற்பம்
ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
| சிற்பத்தின் பெயர் | ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | மணல் கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
|
விளக்கம்
அண்டமுற நிமிர்ந்தாடும் ஊர்த்துவ தாண்டவம் (ஒற்றைக்காலை உயரேத் தூக்கி ஆடும் நடனம்)
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
ஒற்றைக் காலை உயரேத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடும் சிவபெருமானார் வலது காலை உயர்த்தியுள்ளார். எட்டு திருக்கைகள் கொண்டுள்ளார். முன் வலது கை தூக்கிய காலை வளைத்து அணைத்தபடி அபய முத்திரை காட்டுகிறது. இடது முன் கை அருகில் ஆடும் நந்தியின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஜடாமகுடம் அணிந்துள்ள ஊர்த்துவரின் முகம் புன்னகையுடன் இடதுபுறம் திரும்பியுள்ளது. ஆடலுக்கேற்றவாறு உடலின் நெகிழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. மார்பில் கண்டிகை, சவடி அணிந்துள்ளார். கைகளில் தோள்வளை, முன்வளை, கடகவளை அணிந்து, வயிற்றில் பட்டையான உதரபந்தம் அணிந்து, அரையாடை உடுத்தி, இடையாடையின் முடிச்சுகள் இடதுபுறம் பறந்த நிலையில் ஆடுகின்றார். முன் வலது கையிலிருந்து இடது மார்பின் வழி முப்புரிநூல் செல்கிறது. பிரம்மமுடிச்சு இடமார்பில் காட்டப்பட்டுள்ளது. ஆடல்வல்லானின் தூக்கிய வலது காலின் கீழே கணம் ஒன்று மகிழ்ச்சியுடன் ஆடுகிறது. ஆடும் நந்தியின் கீழே உள்ள மற்றொரு கணம் குத்துக்காலிட்டு அமர்ந்து புல்லாங்குழல் வாசிக்கிறது. ஆடல்வல்லானுக்கு இருபுறமும் அமைந்த சிறு கோட்டங்களில் வலதுபுறம் நான்முகனும், இடதுபுறம் திருமாலும் நின்றநிலையில் ஆடலைக் காண்கின்றனர். இருவரின் கைகளும் போற்றும் முத்திரையைக் காட்டுகின்றன. இருவரின் பின்னேயும் ஒருவர் நிற்கின்றனர்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 55 |
| பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
அன்னையர் எழுவர்
அன்னையர் எழுவர்
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
27
|
0
|
0
|
0
தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
27
|
0
|
0
|