சிற்பம்
திரிபுராந்தகர்
திரிபுராந்தகர்
சிற்பத்தின் பெயர் | திரிபுராந்தகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
முப்புரம் எரிக்க விழையும் முக்கண்ணர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மாறுபடு சூரர்களின் தங்கம், வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அழிக்க சிவனார் வெகுண்டெழும் காட்சி. நான்முகனும், திருமாலும் சிவனாரை சாந்தப்படுத்த முயலுகின்றனர். திருமால் தன் வலது கையை சடையாரின் வலது மார்பில் வைத்தும், இடது கையால் ஓங்கி ஆயுதமெரிய முனிந்திருக்கும் சிவபெருமானின் வலதுகையை தடுத்தும் கொண்டிருக்கிறார். நான்முகன் வலது கையில் வியப்பு முத்திரைக் காட்டியபடியும் இடது கையால் பொறுமை காக்க வேண்டியும் நிற்கிறார். மேலே கணங்கள் போற்றி பாடுகின்றன. அரையாடை அணிந்துள்ள முக்கண்ணரின் ஜடாபாரம் நீண்டு உயர்ந்து விளங்குகின்றது. நெற்றிப்பட்டை அணிந்துள்ளார். சிவனாருக்கு இரு கைகளே தெரிகின்றன. வலது கையை ஓங்கியபடி ஆயுதங்கொண்டுள்ளார். இடது கை எச்சரிக்கை முத்திரை காட்டுகிறது. கழுத்தில் கண்டிகை அழகு செய்கின்றன. அரையாடை அணிந்துள்ள பெருமானின் இடையாடை முன்புறம் தொங்குகின்றது. முப்புரிநூல் வலது தொடையின் வழியாக உடலின் பின்புறம் செல்கிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
திரிபுராந்தகர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |