சிற்பம்
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
| சிற்பத்தின் பெயர் | கங்காதரமூர்த்தி (கங்காதரர்) |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
| ஊர் | காஞ்சிபுரம் |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | மணல் கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
|
விளக்கம்
தன் புரிசடை ஒன்றில் கங்கையைத் தாங்கும் பெருமான் (கங்காதரர்)
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பகீரதனின் தவத்தினால் பூமிக்கு பாய்ந்து வரும் கங்கையை தன் புரி சடை ஒன்றில் தாங்கும் கங்காதரர் வலது காலை ஊன்றி, இடதுகாலை உயர்த்தி பீடத்தில் நிறுத்தி நின்றுள்ளார். இது தூக்கிய முழங்கால் என்ற அமைப்பாகும். (ஊர்த்துவஜானு) ஆறு திருக்கைகளில் வலது முன்கை கடக முத்திரையிலும், நடுக்கை கடியவலம்பிதமாக இடையில் வைத்தவாறும், இடது பின்கை விஸ்மய (விரல்களை விரித்து வியக்கும் முத்திரை) முத்திரையிலும் இடது முன்கை தன் சடை முடியிலிருந்து ஒற்றைப் புரியை நீட்டி அதில் கங்கைப் பெண்ணை தாங்கியவாறும் அமைந்துள்ளன. ஜடாமகுடம் அணிந்துள்ள இறைவன் வலதுபுறம் தலையைச் சாய்த்துள்ளார். நீள்காதுகளில் அணிகலன்கள் அணிந்துள்ளார். அரையாடை அணிந்துள்ள இறைவனின் அணிகலன்கள் சிதைவுற்றுள்ளன. அருகில் நிற்கும் உமையாள் ஒயிலாக சாய்ந்த நிலையில் இக்காட்சியை பார்வையிட்டவாறு இடது காலை ஊன்றி, வலது முழங்காலை வளைத்தும் நிற்கிறார். தேவியின் சிற்பம் மிகவும் சிதைந்துள்ளது. கங்காதரரின் இடது மேற்புறம் பாய்ந்து வரும் கங்கை பெண் வடிவில் காட்டப்பட்டுள்ளாள். கங்காதரரின் வலது காலின் கீழே பகீரதன் காட்டப்பட்டுள்ளான்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
கங்காதரமூர்த்தி (கங்காதரர்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 26 |
| பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சக்ரதானமூர்த்தி
சக்ரதானமூர்த்தி
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
22
|
0
|
0
|
0
அன்னையர் எழுவர்
அன்னையர் எழுவர்
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
26
|
0
|
0
|