சிற்பம்
யோக நரசிம்மர்
யோக நரசிம்மர்
சிற்பத்தின் பெயர் | யோக நரசிம்மர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | திருவாலீஸ்வரம் |
வட்டம் | அம்பாசமுத்திரம் |
மாவட்டம் | திருநெல்வேலி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன் |
விளக்கம்
யோக நிலையில் அமர்ந்துள்ள நரசிம்மர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக உள்ளது. நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. நரசிம்மர், நரசிங்கர், யோக நரசிங்கர், நரசிம்மமூர்த்தி, நரசிங்கமூர்த்தி, சிங்கபிரான், சீயம், ஆனரி, அரி, அரிமுகத்து அச்சுதன் என பல்வேறு பெயர்களைக் கொண்டுள்ளார். திருவாலீஸ்வரத்தில் உள்ள நரசிம்மர் யோக பட்டத்தில் அமர்ந்துள்ளார். ஸ்வஸ்திகாசனத்தில் குறுக்காக கால்களை மடக்கிய அமர்வு கொண்ட யோகாசன நிலையில், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் கொண்டவராய், முன்னிரு கைகள் யோக நிலையில் மடித்த கால்களின் மேல் வைத்துள்ளார். வாயைப் பிளந்து கர்ஜித்தபடி உருட்டிய விழிகளுடன் உள்ளார். மார்பில் சன்னவீரம், முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், கைகளில் தோள்வளை, கடகவளை, முன்வளைகள், கால்களில் வீரக்கழல்கள் ஆகியன விளங்குகின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யோக நரசிம்மர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |