சிற்பம்
சக்ராயுதமூர்த்தி
சக்ராயுதமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | சக்ராயுதமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
அட்ட வீரட்டர்களில் ஒருவராக ஜலந்தரனை வதைத்த சக்ராயுதமூர்த்தி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பூமியில் உள்ள எந்த ஆயுதங்களாலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்ற சலந்தராசுரனை பூமியைக் கீறி சக்கர வரைந்து அதனையே ஆயுதமாகக் கொண்டு வதைத்த சக்ராயுதமூர்த்தி, சிவ வடிவங்களுள் எட்டு வீரச்செயல் புரிந்தவருள் ஒருவர். சலந்தராசுரனை யோகபட்ட நிலையில் அமர்ந்தவாறு வதைக்கிறார். நான்கு திருக்கைகளில் மேலிரு கைகளில் குண்டிகையையும், அக்கமாலையையும் கொண்டுள்ளார். கீழிரு கைகள் மடக்கிய முழங்காலுக்கு வெளியே நீண்டுள்ளன. யோகபட்ட நிலையில் அமர்ந்திருக்கும் இறையவனின் கீழ் பெரிய உருவமாக சலந்தரன் காட்டப்பட்டுள்ளான். அவனது வலது தோளில் இறைவனால் ஏவப்பட்ட சக்கரம் காட்டப்பட்டுள்ளது. சலந்தரனின் வதைபடலத்தைக் காணுவதாக மேலே இரு உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்காட்சியை கண்டு போற்றுகின்ற கையையுடைய தேவர்கள் மேலே பக்கத்திற்கு ஒருவராகக் காட்டப்பட்டுள்ளனர். ஜடாமகுடம் தலையலங்காரமாகக் கொண்டுள்ள இறையனாரின் நீள்காதுகள் முன் தோள்களில் வழிந்தோடுகின்றன. அரக்கன் பெரிய உருவமாக மரணத்தைக் கண்டு பிதுங்கிய உருட்டு விழிகளுடன் நிலத்தில் வீழ்ந்த நிலையில் உள்ளான். மகுடம் தரித்துள்ள ஜலந்தரனின் முப்புரிநூல் அசுரனின் மடக்கிய இடது காலில் வீழ்ந்து கிடக்கிறது. உருவத்திற்கேற்ற பெரிய காதணிகளைக் கொண்டுள்ளான். கைகளில் கடக வளை, முன்வளைகள் காட்டப்பட்டுள்ளன. வலது கையில் கதாயுதத்தைப் பிடித்துள்ளான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சக்ராயுதமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சக்ரதானமூர்த்தி
சக்ரதானமூர்த்தி
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
13
|
0
|
0
|
0
அன்னையர் எழுவர்
அன்னையர் எழுவர்
சைவம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
17
|
0
|
0
|