சிற்பம்
பிரம்மச்சிரச்சேதமூர்த்தி
பிரம்மச்சிரச்சேதமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | பிரம்மச்சிரச்சேதமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கைலாசநாதர் கோயில் |
ஊர் | காஞ்சிபுரம் |
வட்டம் | காஞ்சிபுரம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | மணல் கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
விளக்கம்
ஆணவங்கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்த பிரம்ம சிரக்கண்டீஸ்வரர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
முன்பொரு காலத்தில் நான்முகனாகிய பிரம்மனும் சிவனைப் போலவே ஐந்து தலைகளைக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு கர்வம் ஏற்பட்டது. இருவருக்கும் ஐந்து தலைகள் அமைந்ததால் குழப்பமும் ஏற்பட்டது. பிரம்மனின் ஆணவத்தைப் போக்க சிவபெருமான் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து விட்டார். அத்தலை அவர் கையோடு ஒட்டிக்கொண்டது. சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களில் இதுவும் ஒன்றாகும். எட்டுக் கைகளுடன் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ள பிரம்மன் தலைக் கொய்தவர் ஜடாபந்தம் தலையில் விளங்க, காதுகளில் வளையங்கள் அணி செய்ய, கழுத்தில் முத்துச்சரம், கண்டிகை திகழ, எட்டுக்கைகளிலும் முன்வளைகள், தோள்வளைகள் அமைய உள்ளார். முப்புரிநூல் இடது தோளிலிருந்து வலது பின்னங்கை வழி செல்கிறது. வீரச்சங்கிலி ஒன்று இடது தோளிலிருந்து வலது முழங்காலுக்குக் கீழே செல்கிறது. வலது முன் கையில் ஓங்கிய வாளையும், மற்றொரு வலது கையில் சூலத்தையும் கொண்டுள்ளார். இடது கைகளில் முன்கை அச்சுறுத்தும் தர்ஜனி முத்திரை காட்டுகிறது. பின்னங்கைகளில் ஒன்றில் கொய்த பிரம்மனின் ஐந்தாவது தலையையும், மற்றொன்றில் வியப்பு முத்திரையையும் கொண்டுள்ளார். கீழே நான்முகனாகிய பிரம்மன் அமர்ந்துள்ளார். அவரின் பின் வலது கை அக்கமாலையை பிடித்துள்ளது. முன் வலது கை இறைஞ்சும் முத்திரையாக அமைந்துள்ளது. ஜடாமகுடம், நீள் காதுகளில் குண்டலம், சரப்பளி, மார்பில் முப்புரிநூல், கைகளில் வளைகள் ஆகியன அமையப் பெற்றுள்ளன. அருகில் கைகளை கட்டிய நிலையில் இளம் முனிவர் போன்ற ஒருவர் பணிவுடன் நிற்கிறார். இவர் சண்டேசராய் இருக்கலாம்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பிரம்மச்சிரச்சேதமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |