சிற்பம்
ஆடல்வல்லான்
சிற்பத்தின் பெயர் ஆடல்வல்லான்
சிற்பத்தின்அமைவிடம் ஆனந்தவல்லி உடனுறை தஞ்சபுரீசுவரர் கோயில்
ஊர் வெண்ணாற்றங்கரை
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் அர்த்தமண்டப தென்புற கோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
a:1:{i:0;s:2642:"தஞ்சை நகரின் வெண்ணாற்றங்கரைப் பகுதியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை தஞ்சபுரீசுவரர் என்னும் கலைக்கோயில் முற்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியன தனித்துவம் வாய்ந்தவை. இக்கோயிலில் தென்முகக்கடவுள், நான்முகன், கொற்றவை, கணபதி, ஆடல்வல்லான், உமையொருபாகன் ஆகிய முற்காலச் சோழர் கலைப்பாணியிலமைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் அர்த்தமண்டப வடபுற கோட்டத்தில் அமைந்துள்ள ஆடல்வல்லானின் சிற்பம் மிகவும் எழில் வாய்ந்ததாக திகழ்கிறது. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்புமாய் ஆடல்வல்லான் காட்டப்பட்டுள்ளார். ஆனந்தத் தாண்டவமாய் இருக்கலாம். அய்யனின் இருபுறமும் முனிவர்கள் அமர்ந்து ஆடலை காண்கின்றனர். ஊன்றிய திருவடியில் முயலகன் விழி பிதுங்குகிறான். நாலிரு கைகள் நடராச தத்துவத்தை விளக்குகின்றன. அண்ணலின் ஆடற்கோலம் அண்டத்தின் தோற்றம் ஓடுக்கம் பற்றிய தத்துவ நிலையைக் கூறும் படிம நிலை என்பதாக சோழர்கள் காலத்தில் கருதப்பட்டதால் தான் சிவபெருமானின் ஆடல் வடிவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதெனலாம்.";}
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கோயிலின் அர்த்தமண்டப வெளிப்புற கோட்டத்தில் உள்ள ஆடல்வல்லானின் சிற்பம் சோழர்களின் தனித்துவ கலைப்பாணியில் அமைக்கப்பட்ட ஆடற் திருமேனிகளுள் ஒன்றாகும்.
குறிப்புதவிகள்
ஆடல்வல்லான்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 11
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்