சிற்பம்

ஆடல்வல்லான்

ஆடல்வல்லான்
சிற்பத்தின் பெயர் ஆடல்வல்லான்
சிற்பத்தின்அமைவிடம் முக்தேஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
ஆனந்தத் தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலமெல்லாம்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பத்துத் திருக்கைகளுடன் இறைவன் ஆடும் ஆடலை உமை காணும் காட்சி. காண்போர் வியக்க ஸ்வஸ்திக கரணத்தில் கால்களை வைத்தபடி ஆடுகிறார். ஜடாபந்தம் ஆடல்வல்லானுக்கு அழகு செய்கிறது. கைகளில் தோள்வளை, கடகவளை, முன்வளை ஆகிய முகப்புகளோடு அணி செய்யப்பட்டுள்ளன. அரையாடை அணிந்த நடராசரின் இருபுறமும் ஆடை முடிச்சு காணப்படுகின்றது. நந்தியார் முழவினை இசைக்க, உமையன்னை ஏகபாத ஸ்தானகத்தில் ஒரு பாதத்தை ஊன்றி ஒரு காலை முழங்கால் வரை மடக்கி நின்ற நிலையில் தாண்டவமூர்த்தியின் ஆடலைக் காண்கிறார். அன்னையின் மடக்கிய காலை பூதம் ஒன்று தாங்குகின்றது. இருகைகளில் இடது கையை எழிற்கையாக ஊன்றியுள்ளார். வலது கை மலர்ப்பிடி முத்திரை காட்டியுள்ளது. அன்னையின் அருகிலுள்ள மற்றொரு குள்ளபூதத்தின் இருதோள்களில் தன் கால்களை வைத்தவாறு ஆறுமுகன் இவ்வாடல் காட்சியைக் காண்கின்றார். அன்னைக்கும் ஆறுமுகனுக்கும் கரண்டமகுடம் அணி செய்கின்றது. இறைவர்க்கும் அன்னைக்கும் இசை முழக்குபவர்க்கும் தோள்வளை, கடகவளை, முன்வளை கைகளில் அழகு செய்கின்றன. கழுத்தணிகளாக சவடி, கண்டிகை, சரப்பளி ஆகியனவும், தோள்களில் வகுளமாலையும் எழிலூட்டுகின்றன. ஆடல்வல்லானும், இசையமைப்பாளரும் அரையாடையும், உமை கணுக்கால் வரையும் அணிந்துள்ளனர். கணங்கள் தங்களுக்கே உரிய ஆடையணிகலன்களோடு விளங்குகின்றன. ஆடல்வல்லானின் மேலே இருபுறமும் வானவர் இருவர் சாமரம் வீசுகின்றனர். இடப்பக்கம் உள்ளவரின் அருகில் உள்ள மற்றவர் வாழ்த்தொலிக்கிறார்.
குறிப்புதவிகள்
ஆடல்வல்லான்
சிற்பம்

ஆடல்வல்லான்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 11
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்