சிற்பம்

அய்யனார்

அய்யனார்
சிற்பத்தின் பெயர் அய்யனார்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
a:1:{i:0;s:2062:"பீடத்தின் மீது அய்யனார் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். இரு கரங்களில் வலது கையில் வளைத்தடியாகிய செண்டு காணப்படுகிறது. இடது கையை மடக்கிய இடது தொடையின் மேல் ஊரு முத்திரையாக வைத்துள்ளார். ஜடாபாரம் தலைக்கோலமாக விளங்குகிறது. காதுகளில் பத்ரகுண்டலமும் மகர குண்டலமும் அணி செய்கின்றன. மார்பில் முப்புரிநூலும், கழுத்தில் சவடியும், கண்டிகையும், கைகளில் தோள்வளை, கேயூரம், கடகம் ஆகியனவும், கால்களில் பாடகமும் அணிந்துள்ளார். ஆய்யனின் இருபுறமும் அவரின் தேவியர் தம் ஒரு கையில் மலரைப் பிடித்துக் கொண்டுள்ளனர். தேவியரின் அமர்வு தலைவனை நோக்கியுள்ளது. தேவியர் இருவரின் முகமும் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. வலப்பக்கத்து தேவி புன்னகை முகத்துடன் அமர்ந்துள்ளார். இச்சிற்பங்களின் உருவமைதிகளில் சோழர்களின் கலைப்பாணி காணப்படுகிறது என்பது நோக்கத்தக்கது. ";}
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம் வட்டத்தில் அகிலாண்டபுரம் என்னுமிடத்தில் இந்த அய்யனார் புடைப்புச் சிற்பம் கிடைத்துள்ளது. இச்சிற்பத் தொகுதியின் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டாகும். காங்கேய நகரின் தெற்கே ஒரு காட்டினுள் கிடைத்த இந்த அழகிய அய்யனார் சிற்பம் தன் தேவியர் பூரணை, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
அய்யனார்
சிற்பம்

அய்யனார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 64
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்