Back
சிற்பம்
சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பத்தின் பெயர் சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் குறங்கணி நாதர் கோயில்
ஊர் சீனிவாசநல்லூர்
வட்டம் லால்குடி
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
சண்டேசருக்கு அருள்பாலிக்கும் சிவனார் சண்டேச அனுக்கிரகர்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
அரைத்தூணில் மாலைத் தொங்கல் உறுப்பில் அமைந்த சிறிய புடைப்புச் சிற்பம் இது. பீடத்தின் மீது ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ள இறையனார் சிவபெருமான் தன்னைப் பணிவுடன் அரை முழந்தாளிட்டு கைகளை குறுக்கேக் கட்டி, தலையைத் தாழ்த்தி வணங்கும் சண்டேசரை வலது கையை உயர்த்தி வாழ்த்துகிறார். இடது கையில் மாலை போன்று ஒன்று அமைந்துள்ளது. அது இறைவனின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட கொன்றை மாலையாக இருக்கலாம். சண்டேசருக்கு முடியில் மாலை சூட்டுவதற்காக இருக்கலாம். மேலே இருவர் இக்காட்சியை காண்கின்றனர். சிவனார் அமர்ந்திருக்கும் பீடத்தின் கீழ் இரண்டு மான்கள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்