சிற்பம்

சாமரப் பெண்
சிற்பத்தின் பெயர் | சாமரப் பெண் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குறங்கணி நாதர் கோயில் |
ஊர் | சீனிவாசநல்லூர் |
வட்டம் | லால்குடி |
மாவட்டம் | திருச்சி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பிற வகை |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
விளக்கம்
சோழர் குல நங்கை சாமரம் வீசும் பெண்ணாக எழிலுடன் நிற்கிறாள்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பீடத்தின் மீது சமபாதத்தில் நின்ற நிலையில், பக்கவாட்டில் திரும்பிய நிலையில் உள்ள சோழர் குல மங்கை எழில் வாய்ந்த தோற்றத்துடனும், இளமைப் பொழிலுடனும் விளங்குகிறாள். முகப்பில் பூரிமத்துடன் விளங்கும் கரண்ட மகுடம் அணிந்துள்ள இந்நங்கை இடது கையை தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையிலும், வலது கையில் வலது தோளில் சார்த்திய சாமரத்துடனும் உள்ளாள். நெற்றிப்பட்டை முத்தாலான தொய்யகத்துடன் அணி செய்கிறது. நீள் காதுகளில் மகர குண்டலங்களும், கழுத்தில் சரப்பளியும், மார்பின் நடுவே செல்லும் முப்புரி நூலும், தோள்களில் தோள்மாலை, கைகளில் முன்வளைகள் அணிந்துள்ளாள். கால்களில் பாடகம் அணிந்துள்ளாள். இடையாடை முழங்காலுக்குக் கீழே செல்கிறது. இடைக்கட்டு முகப்புடன் உள்ளது. இடைக்கட்டின் முடிச்சு இடது பின்புறம் அமைந்துள்ளது. சோழர்கள் தாம் அமைத்த கற்றளியில் தம் நாட்டு பெண்களின் உடலமைப்பையும், ஆடையாபரணங்களையும் சிற்ப வடிவில் செதுக்கியுள்ளனர் போலும். முதலாம் ஆதித்தனின் கற்றளியான குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் விமானக் கோட்டங்களில் உள்ள பெண் உருவங்களை ஒத்துள்ளது இச்சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |