சிற்பம்
விஷ்ணு
சிற்பத்தின் பெயர் விஷ்ணு
சிற்பத்தின்அமைவிடம் புள்ளமங்கை
ஊர் பசுபதி கோயில்
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன்
விளக்கம்
அண்ணாமலையார் சிற்பத் தொகுதியில் இடது புறம் நிற்கும் திருமால்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
இலிங்கோத்பவரின் இடதுபுறம் விஷ்ணு நின்றநிலையில் நடுவில் உள்ள இலிங்கோத்பவரை நோக்கி வலதுகாலை ஊன்றி, இடதுகாலை சற்று முன்னோக்கி வைத்தவாறு, பரந்தமார்பினராய் உள்ளார். கிரீடமகுடராய், நான்கு திருக்கைகளில் மேற்கைகளின் விரல்களுக்கிடையே சக்கரம், சங்கு கொண்டவராய், கீழிரு கைகளில் இடதில் கடி முத்திரையும், வலது உள்ளங்கையில் மலர் போன்ற ஒன்றையும் கொண்டவராய் இருக்கிறார். காதுகளிலும், கைகளிலும் பிரம்மனைப் போன்றே அணிகள் உள்ளன. கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்துள்ளார். இடதுமார்பின் அருகே முப்புரிநூலின் பிரம்மமுடிச்சு உள்ளது. வயிற்றில் உதரபந்தம், இடையணி காட்டப்பட்டுள்ளது. கணுக்கால் வரை நீண்ட பட்டாடையின் முடிச்சுகள் பின்புறமாக இடையின் இருபுறம் கட்டப்பட்டு நீண்டு தொங்குகிறது. கால்களில் பாடகங்கள் உள்ளன. புன்னகை பூக்கும் அழகு முகத்தினராய் திருமால் திறந்த விழிகளோடு, சற்று விடைத்த மூக்கோடு, அழகிய சிறிய பவளச் செவ்வாய் இதழ்கள் கொண்டு, இளமையான தோற்றப் பொலிவினைப் பெற்று விளங்குகிறார்.
குறிப்புதவிகள்
விஷ்ணு
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்