சிற்பம்
சூரியனார்
சிற்பத்தின் பெயர் சூரியனார்
சிற்பத்தின்அமைவிடம் புள்ளமங்கை
ஊர் பசுபதி கோயில்
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சௌமாரம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.20-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
நவக்கிரகங்களில் முதல்வரான சூரிய தேவன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
தாமரைப் பீடத்தின் மேல் சமபாதத்தில் நின்றவராய், இரு கைகளில் தாமரை மலரை ஏந்தியவராய், தலையின் பின்புறம் ஒளிவட்டம் திகழ, கரண்ட மகுடம், மேற்காதுகளில் கொப்பு, மகர குண்டலங்கள் அணிந்து காணப்படுகிறார். கழுத்தில் மணிமாலையும், பதக்கமும் உள்ளன. முப்புரிநூல், உதரபந்தம் உடலணிகளாகக் காட்டப்பட்டுள்ளன. பாதம் வரை இருபுறமும் நீண்டு தொங்கும் முடிச்சுகளுடன் கூடிய பட்டாடையை கணுக்கால் வரை அணிந்துள்ளார். கை மற்றும் கால் விரல்களில் அணிகளும், காலில் கழலும், சதங்கையும் உள்ளன. விடைத்த மூக்கும். நீள் புருவமும், மூடிய விழிகளும் இச்சிற்பம் விசயநகர, நாயக்கர் கலைப் பாணியை நினைவுபடுத்துவதாய் உள்ளது.
குறிப்புதவிகள்
சூரியனார்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்