சிற்பம்

சப்தமாதர்கள்
சிற்பத்தின் பெயர் | சப்தமாதர்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | புள்ளமங்கை |
ஊர் | பசுபதி கோயில் |
வட்டம் | பாபநாசம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
விளக்கம்
ஏழு நிலைகளில் காட்டப்படும் சக்தியின் அம்சங்களாக உள்ள கன்னியர் எழுவர்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். புள்ளமங்கை திருக்கோயிலின் திருச்சுற்றின் தென்புறம் வடக்கு நோக்கி சப்தமாதர் சிற்பத்தொகுதியில் இருந்து பிரிந்த சிற்பங்களாக மகேசுவரி, வராகி, யோகி சிவன் பிராம்மி, வைஷ்ணவி ஆகிய சிற்பங்கள் பீடத்துடன் கூடிய புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. இந்த ஐந்து சிற்பங்களும் இக்கோயிலைச் சேர்ந்தவை. அன்னையர் நால்வரும் இடக்காலை மடக்கி, வலதுகாலை தொங்கவிட்டபடி, நான்கு திருக்கைகளில் அவரவர்க்குரிய ஆயுதங்களையும், கீழிருகைகளில் இடது கை தொடையிலும், வலது கை அபயமுத்திரையையும் கொண்டுள்ளனர். நால்வரும் மார்பில் குஜபந்தத்துடன், ஆடையணிகளுடன் நெற்றிப்பட்டமுடன், தலையில் வைஷ்ணவி கிரீடமகுடமும், மற்ற மூவரும் கரண்ட மகுடமும் பெற்றவராய் விளங்குகின்றனர். நடுவில் உள்ள யோக சிவனார் யோகபட்டத்தில் அமர்ந்துள்ளார். ஜடாபாரம், நான்கு கைகளில் கீழ்க்கைகள் யோக நிலையிலும், மேற்கைகளில் மான், மழுவையும் தாங்கியுள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |