சிற்பம்
தண்டாயுதபாணி
| சிற்பத்தின் பெயர் | தண்டாயுதபாணி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | புள்ளமங்கை |
| ஊர் | பசுபதி கோயில் |
| வட்டம் | பாபநாசம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | கௌமாரம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.20-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
ஆண்டிக் கோலம் ஏற்ற முருகனின் ஒரு வடிவம்
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சதுர வடிவ பீடத்தின் மேல், வலது கையில் தண்டு கொண்டு நிற்கும் இச்சிற்பம் பிற்காலக் கலைப் பாணி போன்று தெரிகின்றது. தலையில் உச்சிக் கொண்டையும், நெற்றியில் உருத்திராக்க மாலையும், இடையில் கோவண ஆடையுமாக விளங்கும் இச்சிற்பத்தின் இலக்கணம் தண்டாயுத பாணிக்கு உரியதாகும். விரிந்த சடைக்கற்றைகள் இருபுறமும் தொங்குகின்றன. இடது கையை தொடைமீது வைத்து கால்களில் வீரக்கழல்களும், சதங்கையும் அணிந்துள்ள தண்டாயுத பாணி கழுத்தில் நீண்ட ஆரமும், முத்துவடமும், பதக்கச் சங்கிலியும், கைகளில் வளைகளும் மார்பில் முப்புரிநூலும் பெற்று விளங்குகின்றார்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 25 |
| பிடித்தவை | 0 |