கல்வெட்டு
வரிச்சியூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வரிச்சியூர்
ஊர் வரிச்சியூர்
வட்டம் மதுரை வடக்கு
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் உதயகிரி சுப்பிரமண்ய மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரை மாவட்டம் மதுரை வடக்கு வட்டத்தில் சிவகங்கை செல்லும் சாலையில் வரிச்சியூர் அமைந்துள்ளது. இவ்வூரிலுள்ள உதயகிரி என்றழைக்கப்படும் சுப்பிரமண்ய மலையில் மூன்று தமிழ்-பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. வடக்குப் பார்த்தமைந்துள்ள சிறிய குகைத்தளத்தின் புருவப் பகுதியிலும் கிழக்குப் பார்த்துள்ள குகைத்தளத்தின் புருவப் பகுதியில் வெட்டுள்ள நீர்வடிவிளிம்பின் மேலும் கீழுமாக இம்மூன்று கல்வெட்டுகளும் உள்ளன. இக்கல்வெட்டுகள் 1908இல் படியெடுக்கப்பட்டு அவ்வாண்டு இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் குறிப்புகளாக வெளியிடப்பட்டன. இக்குகைத்தளம், கல்வெட்டுகள் மற்றும் இங்குள்ள குடைவரைக் கோயில்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மரபுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இக்கல்வெட்டு வடக்கு நோக்கிய சிறிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறை முகப்பில் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இப்பள்ளியை அமைத்தவரின் பெயர் சொல்லப்படுகிறது. கல்வெட்டின் இறுதிப் பகுதி சிதைந்துவிட்டதால் கொடையளித்தவரின் பெயரைத் தெரிந்து கொள்ள இயலவில்லை.
குறிப்புதவிகள்
வரிச்சியூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 152
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு