Back
கல்வெட்டு
சமுத்திராபட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சமுத்திராபட்டி
ஊர் சமுத்திராபட்டி
வட்டம் நத்தம்
மாவட்டம் திண்டுக்கல்
அமைவிடத்தின் பெயர் மதுரை திருமலைநாயக்கர் அரண்மனை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சமுத்திராபட்டி ஊருக்கு வடமேற்கில் உள்ள ஒரு காட்டில் உள்ள தனிக்கல்லில் வணிகக்குழுக்களில் ஒன்றான அஞ்ஞூற்றுவர் கல்வெட்டொன்று கல்லின் நான்கு பக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. தென்னாட்டிலும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரந்த அளவில் வாணிகம் செய்து வந்த பெருங்குழுவான அஞ்ஞூற்றுவர் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் பல கிடைத்தாலும் 11-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இக்குழுவின் முழு மெய்க்கீர்த்தியோடு கிடைக்கும் முதல் தமிழ்க்கல்வெட்டு இது எனலாம். இப்பெருங்குழுவின் ஒரு பிரிவான அழகிய பாண்டிய பெருநிரவி என்ற குழு கூடி பனியாநாடு என்ற பகுதியை நானாதேசி எறிவீரபட்டணம் என்ற வீரதாவளமாக மாற்றியது. இவ்வணிகக் குழுவுக்குள்ளாக ஏதோ உட்பூசல் இருந்ததாகத் தெரிகிறது. உட்பூசலில் வெற்றி பெற்ற பிறகு மேற்சொன்ன வீரதாவளம் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கல்வெட்டு தற்போது மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ளது.
குறிப்புதவிகள்
சமுத்திராபட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_INS_001849/TVA_INS_001849_த...

  • TVA_INS_001849/TVA_INS_001849_த...

  • TVA_INS_001849/TVA_INS_001849_த...

  • TVA_INS_001849/TVA_INS_001849_த...

  • TVA_INS_001849/TVA_INS_001849_த...

  • TVA_INS_001849/TVA_INS_001849_த...

  • TVA_INS_001849/TVA_INS_001849_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 563
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு