கல்வெட்டு
அழகர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர் மலை
ஊர் அழகர் மலை
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு நெற்றிப் பாறையில் ஒரு நீண்ட வரியாக வெட்டப்பட்டுள்ளது. இவ்வரி ‘மத்திரைக்கே’ என்ற சொல்லுடன் தொடங்குகிறது. அடுத்தடுத்து ஆட்பெயர்களும் குறியீடுகளும் உள்ளன. இவற்றைத் தனித்தனிக் கல்வெட்டுகளாகவும் ஒரே கல்வெட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் வரும் மத்திரைக்கே என்ற சொல்லினை முதற்பெயரோடு சேர்ந்ததாகவும் ஒவ்வொரு பெயருடனும் சேர்ந்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அனைவரும் இக்குகைத் தளத்தினை அமைத்திடவோ அல்லது அங்குள்ள பெரிய அளவிலான சுனையை அமைத்திடவோ கொடையளித்துள்ளனர். காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். மத்திரையை (மதுரை)ச் சேர்ந்த உப்பு வணிகன் வியக்கன் கணதிகன் என்பவரது பெயர் குறிக்கப்படுகிறது. கணதிகன் என்பதனை அடுத்து வரும் கல்வெட்டின் தொடக்கமாகவும் கொள்வர்.
குறிப்புதவிகள்
அழகர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 115
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு