கல்வெட்டு
கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம் |
|---|---|
| ஊர் | கிண்ணிமங்கலம் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | ஏகநாதர் கோயில் குருமடத்தில் உள்ள உடைந்த தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கிண்ணிமங்கலம் என்னும் ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று காலத்தால் பழமையான கல்வெட்டாகத் தமிழியில் (தமிழ் பிராமி) எழுதப்பட்டிருக்கிறது. ஒரு எண்பட்டைத் தூணில் கிடைத்திருக்கும் இந்தக் கல்வெட்டில், 'எகன் ஆதன் கோட்டம்' என்ற சொற்கள் கிடைத்துள்ளன. இதுவரை தமிழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், நடுகற்களில் சமண படுகைகளில்தான் கிடைத்திருக்கின்றன. முதல் முறையாக ஒரு தூணில் அந்த எழுத்துகள் கிடைத்திருக்கின்றன. தவிர, தமிழி எழுத்துகளில் புள்ளி வைக்கும் முறை கிடையாது. ஆனால், இங்கு கிடைத்திருக்கும் 'அதன் ஏகன் கோட்டம்' என்ற வார்த்தைகளில் நான்கு இடங்களிலுமே புள்ளிகள் இருக்கின்றன. ஆகவே இது பிற்காலத் தமிழியாக இருக்கலாம். இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளில் ஆனைமலை கல்வெட்டில்தான் முதன்முதலில் புள்ளி இருந்தது. 'ட்' என்ற ஒரு எழுத்தின் மேல் இந்தப் புள்ளி அமைந்திருந்தது. ஐராவதம் மகாதேவன் அதனை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டார். இந்தக் கல்வெட்டும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்" என்கின்றனர் கல்வெட்டறிஞர்கள். இதுதவிர, கோட்டம் என்ற சொல் இதில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழி கல்வெட்டில் கோட்டம் என்ற சொல் இதுவரை இடம் பெற்றதில்லை. பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் முதன்முதலாக கோட்டம் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. ஆகவே கோட்டம் என்ற சொல் இடம்பெற்ற முதல் தமிழி கல்வெட்டும் இதுதான் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
-
TVA_INS_001918/TVA_INS_001918_ம...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 626 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 15 |