கல்வெட்டு
திருவாதவூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருவாதவூர்
ஊர் திருவாதவூர்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் உவா மலை சமண குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். மாணிக்கவாசகர் பிறந்த ஊராகப் போற்றப்படும் பெருமை உடையது. இவ்வூரின் புறத்தே உவாமலை என்றழைக்கப்படும் குன்றுள்ளது. இக்குன்றில் உள்ள குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பில் கி.மு.2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளை ஐ.மகாதேவன் 1996-இல் கண்டறிந்தார். பாங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் இக்கற்படுக்கையும், கல்வெட்டும் வெட்டப்பட்டுள்ளது. முதல் கல்வெட்டில் ஊர்ப்பெயரான “பாங்காட“ என்பதைப் “பங்காட“ எனவும் வாசிக்கலாம். “ப“வுக்கும் “ங்“க்கும் நடுவில் இடைவெளி உள்ளதால் இங்கு ஓர் எழுத்து விடுபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த இடத்தை “ன“ என்ற எழுத்திட்டு நிரப்பினால் இப்வூர்ப் பெயர் “பனங்காடு“ என்றமையும். திருவாதவூருக்கருகில் இன்றும் “பனங்காடி“ என்ற கிராமமுள்ளதால் இப்பெயர் அவ்வூரைக் குறிப்பதாக் கொள்ளலாம்.
குறிப்புதவிகள்
திருவாதவூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_000013/TVA_INS_000013_த...

  • TVA_INS_000013/TVA_INS_000013_த...

  • TVA_INS_000013/TVA_INS_000013_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 228
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு