கல்வெட்டு
திருவாதவூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருவாதவூர் |
|---|---|
| ஊர் | திருவாதவூர் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | உவா மலை சமண குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது இவ்வூர். மாணிக்கவாசகர் பிறந்த ஊராகப் போற்றப்படும் பெருமை உடையது. இவ்வூரின் புறத்தே உவாமலை என்றழைக்கப்படும் குன்றுள்ளது. இக்குன்றில் உள்ள குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பில் கி.மு.2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகளை ஐ.மகாதேவன் 1996-இல் கண்டறிந்தார். பரசு என்ற உபசரால் இந்த உறைவிடம் (குகைத்தளம்) அமைக்கப்பட்டது என்பது இதன் பொருளாகும். உபசன் என்ற சொல் உபாத்யாயன், சமய ஆசிரியர் என்ற பொருள் உடையது. கல்வெட்டில் உள்ள ‘உபசன்’ என்ற சொல் கொங்கற் புளியங்குளம் தமிழ் - பிராமி கல்வெட்டிலும் காணப்படுகிறது. இச்சொல் உவச்சரையும் குறிக்கின்றது. இவர்கள் பல்லவர்காலக் கல்வெட்டுக்களில் கோயிலில் வாத்தியம் வாசிப்பவர்களாக இருந்துள்ளனர். திருவாய் மொழியில் பரசுதல் என்ற சொல், பாடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 69 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |