கல்வெட்டு
கொங்கற்புளியங்குளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கொங்கற்புளியங்குளம் |
|---|---|
| ஊர் | கொங்கற்புளியங்குளம் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | பெருமாள் கோயில் மலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மூன்றாவது கல்வெட்டில் பாகனூர் குறிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தினுள் சோழவந்தான் பகுதியில் பாகனூர் அமைந்திருந்தது. இக்கல்வெட்டுள்ள மலையின் மறு பக்கத்தில் வைகையாறு ஓடுகிறது. வைகையாற்றின் வளத்தில் சிறந்து விளங்கிய ஊராக பாகனூர் கூற்றம் பாண்டியரின் வேள்விக்குடிச் செப்பேட்டில் சுட்டப்படுகிறது. பிடன் என்பதில் 'ட்' மெய் சேர்த்து பிட்டன் என்று கொள்ளலாம். இத்த என்ற சொல்லை ‘ஈத்த’ என்று படித்து ‘வழங்கிய’ எனப் பொருள் கொள்ளலாம். 'வெபோன்’ என்பதை வெண்பொன் - எனப் பொருள் கொள்ளலாம். இறுதியிலுள்ள குறியீடு பொற்காசின் எடை அல்லது எண்ணிக்கையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வகைக் குறியீடுகள் முத்திரை குத்திய பழமையான காசுகளிலும் அழகன் குளத்தில் கிடைத்த பகடைக்காய் ஒன்றிலும் பானை ஒட்டிலும் காணப்படுகின்றன. மூன்று கல்வெட்டுகளில் இக்கல்வெட்டு இறுதியில் உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். பாகனூரைச் சேர்நத் பேரதன் பிட்டன் என்பவரால் இக்கொடை நல்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 83 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |