கல்வெட்டு
கொங்கற்புளியங்குளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கொங்கற்புளியங்குளம் |
|---|---|
| ஊர் | கொங்கற்புளியங்குளம் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | பெருமாள் கோயில் மலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் மதுரையிலிருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலையில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும் செக்கானூரணிக்கும் இடையில் கொங்கர்புளியங்குளம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகிலுள்ள பெருமாள் கோவில் மலையில் இயற்கையான குகைத்தளத்தில் 50க்கு மேற்பட்ட கற்படுக்கைகளும் மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுக்களும் உள்ளன. இவை 1910இல் முதல் முதலாக அறியப்பட்டு அவ்வாண்டு இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டன. இக்கல்வெட்டுகளும் குகைத்தளங்களும் சமணர் சிற்பமும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மரபுச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப் பாறைக்குச் சற்றுத்தள்ளி வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளில் முதலாவதாக இக்கல்வெட்டு உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். உபசஅன் ஆகிய உபறுவன் என்பவரால் குகைத்தளத்தின் இப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது என்று இக்கல்வெட்டு பொருள்படும்.முதற் கல்வெட்டில் உள்ள ‘குற' என்பதற்குக் கூரை என்றும் ‘கூறு’ (பகுதி) என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். 'கொடுபிதவன் என்பதிலுள்ள ‘கொடு’, என்னும் பகுதிக்கு வழங்கு என்றும் கொட்டு, குடைவி, செதுக்கு என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். ‘உபசஅன்' என்ற சொல்லுக்குரிய விளக்கம் திருவாதவூர் கீழவளவுக் கல்வெட்டுப் பகுதியில் தரப்பட்டுள்ளது போல் சமய ஆசிரியன் என்று பொருள் கொள்ளலாம். ‘உபறுவன்’ என்ற சொல் கிணறு, குளம் தோண்டும் பணியாளரையும் சாலைப் பணியாளரையும் குறிக்கும் சொல்லாகக் கருதப்படுகிறது. இறுதிப் பகுதி சிதைந்துள்ளமையால் இச்சொல்லை ஆட்பெயராகவும் கொள்ளலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 285 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |