கல்வெட்டு
திருப்பரங்குன்றம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருப்பரங்குன்றம் |
|---|---|
| ஊர் | திருப்பரங்குன்றம் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மதுரை நகருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம். இக்குன்றின் மேற்குப் பகுதியில் உயரமான இடத்தில் இயற்கையாக அமைந்த குகைத்தளம் ஒன்று உள்ளது. அதனைச் சீராக்கி துறவியர் தங்குவதற்கு ஏற்ப கற்படுக்கைகள் அமைத்து அதன் தலைப் பகுதியிலும், பக்கவாட்டிலும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் மூன்று கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் வலமிருந்து இடமாக பொறிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களும் தலைகீழாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் படுக்கையின் தலைப்பகுதியில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு இது இடமிருந்து வலமாக வெட்டப்பட்டுள்ளது போலவே தோன்றும். இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும்.இக்கற்படுக்கையைச் செய்து கொடுத்தவன் அந்துவன் என்பதே இதன் பொருள். கொடுபிதவன் என்பதில் ‘த்’ சேர்த்து கொடுப்பித்தவன் என்று கொள்ள வேண்டும். அந்துவன் என்னும் பெயர் சங்ககாலத்தில் ஓரிரு புலவர்களுக்கும் வழங்கியுள்ளதைக் காணலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 386 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |