கல்வெட்டு
வரிச்சியூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வரிச்சியூர்
ஊர் வரிச்சியூர்
வட்டம் மதுரை வடக்கு
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் உதயகிரி சுப்பிரமண்ய மலை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு கிழக்குப் பார்த்த பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பாறையில் நீர்வடி விளிம்பின் மேலாக உள்ளது. கல்வெட்டின் காலம் ஏறத்தாழ கி.மு. 2-ஆம் நூற்றாண்டாகும். கல்வெட்டு மிக உயரத்தில் உள்ளது. எழுத்துக்கள் சிதைந்துள்ளது. (இப்பள்ளிக்கு) நூறு கலம் நெல் வழங்கப்பட்டமையைக் குறிக்கிறது. கொடை வழங்கியவரின் பெயர் சிதைவுற்றிருக்கலாம். 'ஈதர்’ என்ற சொல் மகிழ்ச்சி விளிச்சொல்லாகக் கருதப்படுகிறது. வரிச்சியூர் கல்வெட்டுகளில் கலம், நெல், நூறு, கருகிய, முழஉகை ஆகிய சொற்கள் பயின்று வருவது சிறப்பானதாகும். எண்-அளவு குறிக்கப்படும் தமிழகக் கல்வெட்டுகளில் இதுவே காலத்தால் முந்தியதாகும். தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் படுக்கைகள் மற்றும் குகை அமைப்புகள் முதலியவை கொடையாகக் கொடுக்கப்பட்ட தகவல்களை மட்டும் காணும் நிலையில் நெல் கொடையாகக் கொடுக்கப்பட்டிருப்பதும் தமிழகக் கல்வெட்டுகளில் இக்கல்வெட்டில் தான் முதன்முலாகத் தெரிய வருகிறது.
குறிப்புதவிகள்
வரிச்சியூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 190
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு