கல்வெட்டு
முதலை குளம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | முதலை குளம் |
|---|---|
| ஊர் | முதலை குளம் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | சின்ன உண்டாங்கல்லு மலை - இராக்கிப்புடவு குகை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இந்தப் பெருங்குளம் வேம்பிற்றூர் ஊரவையினரால் செய்யப்பட்டது என்பது இதன் பொருளாகும். பாடபேதம்- வேம்பிற் ஊற் பேர்அய்அம் சேதவர் - சிரோமணி, ஜெயராஜன், செம்பிறைஊர் பேர்அய்அம் சேதவர் - இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 1978-79. அயம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. இங்குக் குகை போன்ற அமைப்பு நீர்தேக்கி வைக்கும் இடம் என்று கொண்டால் நீர், சுனை, பள்ளம், குளம் என்று தமிழ்ப்பேரகராதி சுட்டும் சொற்பொருள்கள் ஏற்புடையவை ஆகின்றன. இக்கல்வெட்டுள்ள சின்ன உண்டாங்கல்லு மலையை அடுத்து முதலைகுளம் என்ற ஊர் குளத்தின் பெயரால் இருப்பதாலும் அவ்வூரில் சுமார் 2 கி.மீ சுற்றளவில் ஒரு பெரிய குளம் இருப்பதாலும் இக்கல்வெட்டிலுள்ள 'அயம்' என்ற சொல்லுக்குக் 'குளம்' எனப் பொருள் கொண்டு ‘பேர்’ ‘அயம்’ என்ற சொல்லுக்குப் பெருங்குளம் என்று பொருள் கொள்ளலாம். வேம்பிற் ஊர் என்ற சொல்லில் வேம்பில் என்பது ஊர்ப்பெயரையும் ஊர் என்ற பின்னொட்டு அவ்வூரின் ஊரவையையும் சுட்டுவதாகக் கருதுவர். சங்கப் பாடல்களில் புறநானூற்றுப் பாடல் 317ஐப் பாடிய குமரனாரும். குறுந்தொகையில் 362ஆவது பாடலைப் பாடிய கண்ணன் கூத்தனாரும் வெம்பில் ஊரினராகக் கருதப்படுவர். நம்பி திருவிளையாடலைப் பாடிய செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர் நம்பியும் மதுரைக் கோவையைப் பாடிய சங்கரநாராயணரும் சிராமலை அந்தாதியைப் பாடிய வேம்பையர் கோன் நாராயணனும் இவ்வூரைச் சேர்ந்தவர்களாகலாம். பாண்டிய நாட்டில் மதுரைக்கு வடகிழக்கில் வைகை நதிக்கு வடக்கில் சிவகங்கை மாவட்டத்தில் இப்பெயரில் ஓர் ஊர் அமைந்துள்ளது. பெரிய சின்னமனூர் செப்பேட்டில் களவழி நாட்டு வேம்பற்றூர் என்ற பெயரில் ஓர் ஊர் சுட்டப்பட்டுள்ளது. ‘சேதவர்’ என்ற சொல்லைச் செய்தவர் என்ற சொல்லாகக் கொள்ளலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 166 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |